தொழில்நுட்பம்

MOBILE தொலைந்து விட்டதா?


உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .

இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும்
முதலாவது முறை :.

send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:


இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள் நண்பரே ..
GUARDIAN software ஐ தரவிறக்கம் செய்ய இங்கேhttp://www.guardian-mobile.com/ செய்யுங்கள்


உங்கள் வலைப்பதிவுக்கு டெம்ப்ளேட் மாத்த சில சிறந்த தளங்கள் சில


நாம் வலைப்பதிவை உருவாக்கும் சமயத்தில் நமது வலைப்பதிவிற்காக ஒரு டெம்ப்ளேட்டை தேர்ந்தெடுத்திருப்போம். அது நமக்கு பிடிக்காததாக கூட இருக்கலாம். அப்படி நாம் வேறு வழியின்றி தேர்வு செய்த டெம்ப்ளேட்டை இந்தப் பாடத்தில் எப்படி மாத்துவது என்பது பற்றி பார்க்கலாம். பிளாக்கர் தளத்தில் சில டெம்ப்ளேட்டுகளே இருப்பதால் நாம் நமக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை வேறு ஒரு தளத்தில் இருந்து தரவிறக்கி உபயோகிக்கலாம். அல்லது பிளாக்கரில் இருக்கும் வேறு டெம்ப்ளேட்டுகளையும் உபயோகிக்கலாம்.



இலவசமாக டெம்ப்ளேட்டுகள் தரும் சில தளங்கள்:
http://btemplates.com/
http://www.allblogtools.com/
http://freetemplates.blogspot.com/
http://www.bietemplates.com/
http://www.deluxetemplates.net/
http://www.bloggertemplatesfree.com/

இந்தத் தளங்களில் இருந்து உங்களுக்கு தேவையான டெம்ப்ளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கினால் உங்களுக்கு ஒரு .zip கோப்போ அல்லது .xml கோப்போ சேமிக்கப்படும். .zip கோப்பாக இருந்தால் அதனுள் இருக்கும் .xml கோப்பை பிரித்து எடுக்கவும். பெரும்பாலும் இந்தத் தளங்கள் டெம்ப்ளேட்டின் பெயரிலேயே ஒரு .xml கோப்பை கொடுக்கும். மேலும் சில தளங்கள் அத்துடன் சேர்த்து சில கோப்புகளையும் கொடுக்கும். இதில் நமக்குத் தேவைப்படுவது xml கோப்பு மட்டுமே. அதை சேமித்துக் கொண்டபின்

DASHBOARD ->>
DESIGN ->>
EDIT HTML
என்பதற்குச் செல்லுங்கள். அதில் தற்போது உங்கள் பதிவில் இருக்கும் டெம்ப்ளேட்டை சேமித்துக்கொள்வது நல்லது. நீங்கள் டெம்ப்ளேட்டை மாற்றிய பின்னர் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனே பழைய டெம்ப்ளேட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்குBACKUP/RESTORE TEMPLATE என்பதன் கீழ் உள்ள Download full templateஎன்பதை தேர்வு செய்து உங்கள் பழைய டெம்ப்ளேட்டை சேமித்துக்கொள்ளுங்கள்.



பின்னர் choose file என்பதை தேர்வு செய்து உங்களுடைய புதிய டெம்ப்ளேட்டுக்கான xml கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள். தேர்வு செய்த பின் upload என்பதை தேர்வு செய்து அதை தரவேற்றினால் வேலை முடிந்தது. புதிய டெம்ப்ளேட்டில் உள்ள கோடிங்குகளில் ஏதேனும் தவறு இருந்தால் பிளாக்கர் ஏற்றுக்கொள்ளாது. எல்லாம் செய்த பின்னர் கிழே உள்ளSAVE TEMPLATE என்பதை அழுத்துங்கள். அவ்வளவுதான். இப்பொழுது உங்கள் வலைப்பதிவுக்குச்சென்று பார்த்தால் புதிய TEMPLATE மாற்றப்பட்டிருக்கும்.



மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற


தற்போது வீடியோ எடுக்கும் வசதி இன்றி வரும் மொபைல் போன்கள் குறைவு. உயர் தரத்தில் HD வீடியோ எடுக்கும் அளவுக்கு கூட மொபைல் போன்கள் சந்தைக்கு வந்து விட்டன.

சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான்

இதற்கு தேவையானவை

1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி

இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும்.




அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள்.

இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும்.

இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும்.

இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.


CD/DVD Drive இல்லாத கணினிகளில் இயங்குதளத்தை நிறுவ


வணக்கம் நன்கர்களே, Netbook என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கணினிகளை தற்பொழுது மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். அவற்றின் விலை குறைவாக இருப்பதும், கையில் எடுத்துச் செல்வது எளிது என்பது போன்ற காரணங்களால் அனைவரையும் கவர்ந்திருப்பது ஆச்சர்யமல்ல.ஆனால் இந்த நெட்புக்கில் DVD ட்ரைவ் இல்லை என்ற ஒரு குறைபாடு உண்டு. இதன் ஒரு சில மாடல்களில் இயங்குதளம் நிறுவப்படாமல், Free DOS உடன் வருகிறது. இது போன்ற நெட் புக் களில் விண்டோஸ் 7 , விஸ்டா போன்ற இயங்குதளங்களை நிறுவ, External DVD ட்ரைவ்களை நாட வேண்டியுள்ளது.


   /இந்த Netbook அல்லது DVD ட்ரைவ் பழுதடைந்த or இல்லாத கணினிகளில் பென் ட்ரைவ் மூலமாக இயங்குதளத்தை நிறுவ முடியுமா? இதற்கு நமக்கு தீர்வாக அமைகிறது WinToFlash என்ற மென்பொருள் கருவி.

இந்த மென்பொருளை உபயோகித்து உங்கள் பென் ட்ரைவை ஒரு Windows Bootable Installation Drive ஆக

உருவாக்க, விண்டோஸ் 7 அல்லது தேவையான விண்டோஸ் இயங்குதள Installation CD/DVD இருக்க வேண்டும். மேலும் CD/DVD டிரைவ் உள்ள கணினி இருக்க வேண்டும்.


முதலில் நீங்கள் இதற்காக உபயோகிக்கும் பென் ட்ரைவை (8GB அளவு இருத்தல் நன்று) NTFS முறையில் Format செய்து கொள்ளுங்கள்.


WinToFlash மென்பொருள் கருவியை திறந்து கொள்ளுங்கள். Windows Setup Transfer Wizard ஐ க்ளிக் செய்யுங்கள்.



அடுத்து Task tab -இல் Task type இற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் உங்களுக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து வரும் Basic Parameters திரையில் Windows Files path என்பதில் உங்கள் Windows Installation CD/DVD யின் path ஐ கொடுங்கள். USB Drive இற்கு நேராக USB ட்ரைவின் path ஐ கொடுங்கள். சில சமயம் திறக்கும் விண்டோஸ் லைசன்ஸ் அக்ரீமென்ட் திரையில் I Accept கொடுத்து Continue பொத்தானை அழுத்துங்கள்.


இப்பொழுது பென் ட்ரைவ் மறுபடியும் போர்மட் செய்யப்பட்டு, கோப்புகள் காப்பியாக துவங்கும். இதற்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் எடுக்கலாம். இது உங்கள் கணினியின் வேகத்தைப் பொருத்து மாறுபடும்.




அவ்வளவுதான்!. உங்கள் பூட்டபிள் USB டிரைவ் ரெடி. இதை தேவையான Netbook அல்லது கணினிகளில் Boot from USB drive option இல் சென்று எளிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம்.

                                                                                        Tamilthakavalkal.blogspot இலிருந்து....










No comments:

Post a Comment